இந்தியாவில் புதிதாக 2,468 பேருக்கு கொரோனா
1 min read
2,468 new cases of corona in India
.10.2022
இந்தியாவில் 2 ஆயிரத்து 468 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 968-ஐ விட அதிகமாகும்.
இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 1 ஆயிரத்து 934 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 39 ஆயிரத்து 883 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 33 ஆயிரத்து 318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
17 பேர் சாவு
கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 218.83 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.