இந்தியாவில் புதிதாக இன்று 2,797 பேருக்கு கொரோனா
1 min read
2,797 new corona cases in India today
8.10.2022
இந்தியாவில் புதிதாக 2,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலைவரை கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 2 ஆயிரத்து 797 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை 1 ஆயிரத்து 997 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2 ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,46,06,460 லிருந்து 4,46,09,257 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த இன்று காலை வரை 24 மணிநேரத்தில் 3,884 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,47,344 லிருந்து 4,40,51,228 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 24 பேர் பலியாகினர். இதுவரை 5,28,778 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 29,251 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை நாடு முழுவதும் 218 கோடியே 93 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 4,96,833 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேற்கணட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது