ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் காரணமாக ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள பன்றிகளை கொல்ல கேரள அரசு முடிவு
1 min read
A km due to African swine fever. Kerala government decides to kill pigs at a distance
12.10.2022
கேரள மாநிலம் திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பன்றிகளை கொலை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பன்றி காய்ச்சல்
கேரள மாநிலம் திருச்சூரின் எட்டுமுனை பகுதியில் இருக்கும் தனியார் பண்ணையில் பன்றிகள் கூட்டமாக இறந்தன. அதன் மாதிரிகள் போபாலில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ஆப்பிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பன்றி பண்ணையில் வேலை பார்த்தவர்களின் ரத்தத்தை பரிசோதிக்கவும், அவர்களின் உடல்நிலையை கண்காணிக்கவும் சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் பன்றி தீவனங்களை வாங்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் நோய் கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைத்து பன்றிகளையும் கொல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.