July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம் முடக்கம்

1 min read

Meenakshi Amman Temple website is down

12.10.2022
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டதால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

மீனாட்சி அம்மன்

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள். இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல்பட்டு வந்த https://www.meenakshitemple.org அதிகாரப்பூர்வ இணையதளம் நேற்று முதல் திடீரென முடங்கியது. இந்த இணையதளத்தில் கோவிலில் திருவிழா கோயிலின் வரலாறு கோவில் சிறப்பு, சிறப்பு கட்டணம் மற்றும் ஆன்லைன் மூலம் பிரசாதம் வாங்குதல் உள்ளிட்ட வசதிகள் இந்த இணையதளத்தில் இடம் பெற்றிருந்த நிலையில், கோவில் இணையதளம் முடங்கியதன் காரணமாக வெளி மாநிலம், வெளி நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோவில் இணையதளம் முடங்கியதாகவும் அதனை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.