நரபலி வழக்கில் கைதான பெண் தனது கணவனை கொல்ல திட்டமிட்டார் -திடுக்கிடும் தகவல்
1 min read
Woman arrested in manslaughter case planned to kill her husband – shocking information
13/10/2022
கேரளாவில் பெண்களை நரபலி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட லைலா தனது கணவரை கொல்ல ரகசிய திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
பெண்கள் நரபலி
கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பத்தில் போலீசார் மந்திரவாதி முகமது ஷபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்துள்ளனர். 2 பெண்களை கொலை செய்த மந்திரவாதி முகமது ஷபி வேறு யாரையும் இதற்கு முன்பு கொலை செய்துள்ளாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முகமது ஷபியும், லைலாவும் சேர்ந்து லைலாவின் கணவர் பகவல் சிங்கை கொலை செய்ய ரகசிய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் இன்று கூறியதாவது:-
செல்வந்தர்
பகவல் சிங்கை எப்படியும் செல்வந்தர் ஆக்கி விடுவேன் என்று முகமது ஷபி அவரிடம் உறுதியாக கூறியுள்ளார். இதனை பகவல் சிங் முழுமையாக நம்பி, முகமது ஷபி கூறிய அனைத்தையும் செய்ய தயாராகி உள்ளார். அதன்படி பகவல் சிங்கின் மனைவி லைலாவுடன் கணவர் கண்முன்பே முகமது ஷபி உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் லைலாவுக்கு கணவரை விட மந்திரவாதி முகமது ஷபியின் நெருக்கம் பிடித்து போனது.
இதையடுத்து அவர்கள் இருவரும் பகவல் சிங்கை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கான நேரத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தபோதுதான் அவர்கள் நரபலி வழக்கில் சிக்கி கொண்டனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின்போது, குற்றவாளியான லைலா எந்தவித அச்ச உணர்வும், நடுக்கமும் இன்றி காணப்பட்டு உள்ளார். முகமது ஷபி மற்றும் லைலாவை காவலில் எடுத்து விசாரிக்கும்போது இது தொடர்பாக மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கேரள தம்பதியிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில், 3-வது குற்றவாளியான ரஷீத் என்ற முகமது ஷபி, கேரள தம்பதிக்கு பல ஆலோசனைகளை கூறி தன்வசியப்படுத்தி வைத்து உள்ளார்.