5ஜி தொழில்நுட்படம் இந்தியாவிலேயே தயாரானது: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
1 min read
5G technology is ready in India: Nirmala Sitharaman proud
14.10.2022
5ஜி தொழில்நுட்படம் இந்தியாவிலேயே தயாரானது எனவும், அதனை விரும்பும் நாடுகளுக்கு வழங்க தயார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமன்
அமெரிக்கா சென்றுள்ள நிர்மலா சீதாராமன், ஜான்ஸ் ஹோப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்ட் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் மையத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
இந்தியாவின் 5ஜி வரலாறு மக்களை இன்னும் எட்டவில்லை. நாங்கள் அறிமுகம் செய்த 5ஜி தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பு தனித்துவமானது.
இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் வேறு எங்கு இருந்தும் இறக்குமதி செய்யப்படவில்லை. அது முழுவதும் எங்களின் சொந்த தயாரிப்பு. தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து 5ஜி தொழில்நுட்பம் வரலாம். ஆனால், சிலரிடம் இருந்து வராது. எனவே, முற்றிலும் தனித்துவமான தொழில்நுட்பமான இந்தியாவின் 5ஜி சேவையை விரும்பும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம்.
எங்களது 5ஜி எங்கிருந்தும் இறக்குமதி செய்யப்படவில்லை. அது எங்களின் சொந்த தயாரிப்பு. சமீபத்தில் இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 2024க்குள் நாடு முழுவதும் இந்த சேவை கிடைக்கும். 5ஜி சேவையால், இந்தியாவின் சாதனைகளை பற்றி நாம் பெருமைப்படலாம்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.