பிகாம், பிபிஏ, பிசிஏ படிப்புகளில் 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம்
1 min read
BCom, BBA, PCA Courses Tamil Language is Compulsory in 2nd Year Semester Examination
14.10.2022
பி.காம், பிபிஏ, பிசிஏ படிப்புகளில் 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம் என்று உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்மொழி பாடம்
பி.காம், பிபிஏ, பிசிஏ படிப்புகளில் 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம் என்று உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பிகாம், பிபிஏ, பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெறவில்லை என்றும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நடைமுறையை பின்பற்றக்கூடிய வகையில் இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் இடம்பெற வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே இந்த பாடப்பிரிவுகளில் முதலாமாண்டில் தமிழ் பாடத்தேர்வு இருக்கிறது. இரண்டாம் ஆண்டில் கிடையாது. தற்போது இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் பாடத்தேர்வு இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறையானது நடப்பு கல்வியாண்டிலேயே அதாவது அடுத்த செமஸ்டர் தேர்வு எப்போது நடைபெறுகிறதோ அதிலிருந்தே இந்த உத்தரவு நடைமுறைக்கு வரவேண்டுமென்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.