புளியங்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி -தலைமை ஆசிரியர் உள்பட 4 பேருக்கு காயம்
1 min read
College student killed in motorcycle accident in Buliangudi – 4 including head teacher injured
14.10.2022
புளியங்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். தலைமை ஆசிரியர் உள்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.
விபத்து
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது20), சங்கரன்கோவிலை சேர்ந்தவர்கள் முகேஷ்குமார் (வயது 20), முகமது ரியாஸ் (20). இவர்கள் 3 பேரும் புளியங்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் நோக்கி சென்றனர். அப்போது முள்ளிக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் மணிச்செல்வி (50), அவரது மகன் அபிலேஷ் (18) இருவரும் ஒரு மொபட்டில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். புளியங்குடி பிரதானசாலையில் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது இரு பைக்குகளும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் 5 பேரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.