இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2,678 பேராக குறைந்தது
1 min read
Daily corona cases in India reduced to 2,678
14.10.2022
இந்தியாவில் ஒரு நாளில் புதிதாக 2,678 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
நமது நாட்டில் கடந்த 12-ந் தேதி (புதன்கிழமை) 2,139 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 13-ந் தேதி(வியாழக்கிழமை) இந்த எண்ணிக்கை சற்றே கணிசமாக அதிகரித்து 2,786 ஆனது. இன்று இந்த எண்ணிக்கை சற்று குறைந்து 2,678 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,23,997 ஆக உயர்ந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி சிகிச்சையில் இருந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 583 ஆக குறைந்துள்ளது. தொற்றால் இன்று 10 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை இந்த தொற்றால் 5 லட்சத்து 28 ஆயிரத்து 857 பேர் பலியாகி உள்ளனர். இதில் மூன்று பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,68,557 ஆக பதிவாகி உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98 சதவீதமாக அதிகரித்துள்ளது. வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 1 சதவீமாக உள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 2,19,21,33,244 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,93,963 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது