July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ந்தேதி சட்டசபை தேர்தல்

1 min read

November 12 Assembly Elections in Himachal Pradesh

14.10.2022
இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இமாச்சலப்பிரதேசம்

இமாச்சலப்பிரதேச சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அட்டவணையை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
அதன்விவரம் வருமாறு:-

  • இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.
  • நவம்பர் 12-பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
  • அக்டோபர் 17-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கப்படும்.
    வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக்.25-ம் தேதி
  • மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12-ல் வாக்குப்பதிவு நடக்கிறது.
    இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

குஜராத்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியும் நேறறு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.