சாதிசான்றிதழ் கேட்டு ஐகோர்ட் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டவர் பழங்குடியினத்தவர் அல்ல: தமிழக அரசு விளக்கம்
1 min read
The man who set himself on fire in the court complex after demanding caste certificate was not a tribal: Tamil Nadu Government Explained
14.10.2022
கடந்த 2 நாட்களுக்கு முன்பாக காஞ்சிபுரததற்கு சேர்ந்த வேல்முருகன் என்பவர் பழங்குடியின சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த தங்களை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கனது பொறுப்பு தலைமை நீதிபதி ராஜ மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் தரப்பில் அறிக்கை தக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில்: பலியான வேல்முருகன் பட்டியலினத்தை சார்ந்தவர் என்றும், அவர் பழங்குடி சான்றிதழ் கேட்டு செப்.20-ம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, 23-ம் தேதி கல ஆய்வு நடத்தி, அவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் செப்.26-ம் தேதி அவரது விண்ணப்பமானது நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தனது சகோதரர் எனக்கூறி பழங்குடி இனத்தவர் சான்றிதழை சமர்பித்திருந்தார். ஆனால் அந்த பழங்குடியினத்தாருக்கும், வேல்முருகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கல ஆய்வின் போது தெருவில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்தது எந்த ஒரு தகவலும் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வேல்முருகன் பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்தானா என்பது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து விசாரணை செய்ய மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அந்த மாவட்ட வருவாய் அதிகாரி, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், அண்டை வீட்டார் மற்றும் வேல்முருகனின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் விசாரணை நடத்தவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த விசாரணை அறிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.