சென்னை – மைசூரு இடையே ‘வந்தே பாரத்’ ரெயில் நவம்பர் 10-ந் தேதி முதல் இயக்கம்
1 min read
‘Vande Bharat’ train between Chennai – Mysore will run from November 10
14.10.2022
சென்னை – மைசூரு இடையே ‘வந்தே பாரத்’ ரெயில் நவம்பர் 10-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
வந்தே பாரத் ரெயில்
பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதன்படி, புதுடில்லி – வாரணாசி மற்றும் புதுடில்லி – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, காந்திநகர் – மும்பை, உனா – டில்லி இடையே 4 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்நிலையில், நாட்டின் 5வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, சென்னை முதல் மைசூர் வரை இயக்கப்பட உள்ளன. சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் வரும் நவம்பர் 10ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சென்னையில் இருந்து இந்த ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.