தோரணமலை முருகன் கோவிலில் கடைசி வெள்ளியையொட்டி வருண கலச பூஜை
1 min read
Varuna Kalasa Pooja on the last Friday at Thoranamalai Murugan Temple
14.10.2022
தோரணமலை முருகன் கோவிலில் கடைசி வெள்ளியையொட்டி வருண கலச பூஜை நடந்தது.
தோரணமலை
தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன்கோவிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று காலை பூஜைகள் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கு மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை , வேல் பூஜை நடைபெற்றது.
முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்து இருந்தார்.
=====