திரவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் பலி
1 min read
2 students drowned in Kosasthalai river near Tiravalankadu
15.10.2022
திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
மாணவர்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே மணவூர் காலனியைச் சேர்ந்தவர் கருணா கூலித் தொழிலாளி அவரது மகன் நிரஞ்சன்(வயது 15) திருவெற்றியூரில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாண்டியன் மகன் கோகுல்(15) திருவள்ளூரில் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால், வீட்டிலிருந்த நண்பர்கள் இருவரும் கிராமத்திற்கு அருகில் குப்பம் கண்டிகை கொசஸ்தலை ஆற்றில் நேற்று மதியம் ஜாலியாக குளித்துக்கொண்டு ஆழப்பகுதிக்கு சென்றதில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நீச்சல் தெரியாததால், இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் ஆற்றின் கரைப் பகுதியில் உடைகள் இருப்பது பார்த்து சந்தேகமடைந்து பேரம்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிராமமக்கள் உதவியுடன் ஆற்றில் மூழ்கி இறந்த மாணவர்கள் உடல்கள் மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருவாலங்காடு உதவி காவல் ஆய்வாளர் பூபாலன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி மாணவர்கள் இறந்த சம்பவம் மணவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.