இந்தியா, தமிழக அளவில் கொரோனா நிலவரம்
1 min read
Corona situation in India, Tamil Nadu
15.10.2022
இந்தியாவில் ஒரே நாளில் 2,430 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில்கொரோனா
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், நேற்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 26,618- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,378- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,70,935- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றைக் கண்டறிய ஒரே நாளில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 707 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 5 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவரம் பற்றிய தகவல்களை மருத்துவத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தமிழகத்தில் இன்று 285 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,88,734 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 70 பேர், செங்கல்பட்டில் 25 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரு நாளில் மட்டும் 346 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,46,524 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 38,048 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளாகி தற்போது 4 ஆயிரத்து 162 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.