July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து இறந்தவரின் மனைவி தற்கொலை முயற்சி

1 min read

The wife of the man who set himself on fire in the court premises attempted suicide

15.10.2022
சாதி சான்றிதழ் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகனின் மனைவி, தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை

காஞ்சிபுரத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஐகோர்ட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேல்முருகனின் உடலை வாங்க எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது மனைவி சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதேசமயம் அரசு தரப்பிலோ, வேல்முருகனின் முதல் மனைவியான வெண்ணிலாவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, இறுதி சடங்கு நடைபெற்றது.

தற்கொலை முயற்சி

இதற்கு சித்ரா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று இரவு எலி மருந்து சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார். இதனை தொடர்ந்து, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.