இந்தியாவில் புதிதாக 2,402 பேருக்கு கொரோனா
1 min read
2,402 new cases of corona in India
16.10.2022
இந்தியாவில் புதிதாக 2,401 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
நமது நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் சற்றே குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 2,430 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இன்று சற்று குறைந்து 2,401 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,28,828 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 2,373 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்தோர் எண்ணிக்கை 28ஆயிரத்து 991 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 4,40,73,308 ஐ தொட்டுள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,895 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 26,625 ஐ எட்டியது, இது மொத்த எண்ணிக்கையில் 0.06 சதவீதமாகும்.