இந்திய எல்லையில் நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
1 min read
5 Sri Lankan fishermen arrested for entering Indian border and fishing
16.10.2022
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படை கைது செய்தது.
இலங்கை மீனவர்கள்
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் படகுடன் கைது செய்த இந்திய கடற்படையினர் அவர்களை தூத்துக்குடி அழைத்து வந்தனர். இந்திய கடல் எல்லையில் கன்னியாகுமரிக்கு தென்கிழக்கு சுமார் 90 முதல் 95 கடல் மைல் தொலைவில் இலங்கை கொடியுடன் ஒரு படகு நின்று கொண்டிருந்து. அப்போது இந்திய பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்து இந்திய கடற்படையினர், அந்த இலங்கை படகை சுற்றி வளைத்தனர்.அதில் இருந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீ லால், சுதீஷ் சியான் ஆகிய இலங்கை நீர்கொழும்பு மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படை காவல்துறையினர் கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு இன்று கொண்டு வர உள்ளனர். அவர்களிடம் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை விசாரணை நடத்த உள்ளனர்.