July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

பள்ளிக்குச் செல்வதாக கூறிய 9-ம் வகுப்பு மாணவி பாறைக்குழியில் பிணமாக மீட்பு

1 min read

A 9th grade girl who said she was going to school was found dead in a rock pit

16.10.2022
திருப்பூர் அம்மாபாளையம் அருகே பள்ளிக்குசெல்வதாக கூறிவிட்டு சென்ற 9-ம் வகுப்பு மாணவி பாறைக்குழியில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மாணவி

திருப்பூர்-அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பை அடுத்த பத்மாவதிபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருடைய மனைவி சந்தியாதேவி. இவர்களின் 2-வது மகள் காயத்ரி (வயது 14). இவர் அவினாசி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது மாணவிக்கு, ஒரு மாணவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதையடுத்து காயத்ரியை அவினாசி பள்ளியில் இருந்து விடுவித்து திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் சேர்த்தனர். மேலும் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்த காயத்ரியை காலாண்டு விடுமுறைக்கு பின்னர் ராயபுரத்தில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் தங்கி படிப்பதற்காக பெற்றோர் காயத்ரியை அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சேர்த்தனர்.

இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி மாலை காயத்ரியின் தந்தை ரமேஷ்குமார் பள்ளி முடிந்ததும் மகளை பார்ப்பதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் பள்ளி முடிந்தும் நீண்ட நேரமாக மகள் வராதால் பள்ளிக்குள் சென்று, காயத்ரியின் வகுப்பு ஆசிரியையிடம் கேட்டுள்ளார்.
அப்போது காலையில் இருந்தே காயத்ரி பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியை கூறி உள்ளார். இதனால் பதறிபோன ரமேஷ்குமார் உடனடியாக காயத்ரி தங்கி இருந்த விடுதிக்கு சென்று விசாரித்துள்ளார்.
அங்கிருந்த ஊழியர் காயத்ரி காலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி சீருடை அணிந்து, பள்ளிப் பையை எடுத்துச் சென்றதாக கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில்தேடினர். ஆனாலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

பிணமாக..

இதையடுத்து திருப்பூர் வடக்கு போலீசில் ரமேஷ்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் அருகே கானக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பாறைக்குழியில் பள்ளி சீருடையில் மாணவியின் உடல் திருமுருகன்பூண்டி போலீசார் மற்றும் அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்தான் மாணவி காயத்திரி என்பது தெரியவந்தது. விசாரணையில் கடந்த 12-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற காயத்ரி 3 பேருடன் அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காயத்ரியினுடன் சென்றவர்களை பிடித்து அனுப்பர்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
சம்பந்தப்பட்ட பாறைக்குழிக்கு காயத்ரி உள்பட 4 பேர் சென்ற நிலையில் அந்த பகுதிக்கு எதற்காக சென்றனர்? காயத்ரி எதற்காக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? 5 நாட்கள் ஆன பின்னரும் காயத்ரியுடன் சென்ற 3 பேர் ஏன் இந்த தகவலை வெளியில் கூறவில்லை என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடக்கி உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.