விருந்துக்கு வந்த புதுமண தம்பதி ஆற்றில் மூழ்கி பரிதாப சாவு
1 min read
A newlywed couple who came to a party drowned in the river and died miserably
16.10.2022
தேனி அருகே விருந்துக்கு வந்த புதுமண தம்பதி ஆற்றில் குளிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
புதுமணத்தம்பதி
தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ராஜா(வயது 30). இவரது மனைவி காவியா(20). இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
புதுமண தம்பதிகள் போடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு சஞ்சய் என்பவருடன் பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
நீர் வரத்து திடீரென அதிகரித்ததால் ராஜா சுழலில் சிக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு சஞ்சய் மற்றும் காவியா ஆகியோர் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நீர்வரத்து வேகமாக இருந்ததால் 3 பேரும் சுழலில் சிக்கி ஆழமான பகுதிக்கு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போடி போலீசார், வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோர் விரைந்து வந்த 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் 3 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கமுடிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருந்துக்கு வந்த புதுமண தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.