சத்தீஸ்கர் சட்டப்பேரவை துணை சபாநாயகர் மாரடைப்பால் மரணம்
1 min read
Chhattisgarh Legislative Assembly Deputy Speaker dies of heart attack
16.10.2022
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
சபாநாயகர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனோஜ் சின்ஹா மந்தவி செயல்பட்டு வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்டம் பானுபிரதாபூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இந்நிலையில், 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனை தொடந்து அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மாரடைப்பு ஏற்பட்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அம்மாநில முதல்-மந்திரி, அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.