பிரதமர் மோடி இந்தியாவுக்கு துரோகம் இழைத்துவிட்டார்; சுப்ரமணியசாமி கடும் தாக்கு
1 min read
PM Modi has betrayed India; Subramaniasamy hit hard
16.10.2022
இந்தியாவுக்கு மோடி துரோகம் இழைத்துவிட்டதாக பாஜகவின் மூத்த தலைவரான சுப்ரமணியசாமி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சுப்பிரமணியன்சாமி
பாஜகவின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒருபகுதியாக காட்டும் வகையில் சீன மொழியில் அந்த பகுதிகளை குறிப்பிட்டு எஸ்சிஓ மாநாட்டில் சீனா வழங்கி உள்ளது. பிரதமர் மோடி இந்த கூட்டத்துக்கு சென்று இந்தியாவின் தேசநலனுக்கு துரோகம் செய்தார். 1995ம் ஆண்டு பரஸ்பரம் ஒபபுக்கொண்ட எல்லை கட்டுப்பாட்டு கோடுகளை கடந்து டெப்சாங், கல்வான், கைலாஷ் மலைகளின் பெரும் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இன்னும் விழி மேல் விழிவைத்து பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால் மோடி இன்னும் ஒன்றும் நடக்காதது போன்ற மனநிலையிலேயே உள்ளார்.
இவ்வாறு அவர் சாடியுள்ளார்.