கேதார்நாத் கோவிலுக்கு விரைவில் ரோப் கார் சேவை- மத்திய அரசு திட்டம்
1 min read
Rope car service to Kedarnath temple soon- Central Govt
16.10.2022
கேதார்நாத் கோவிலுக்கு விரைவில் ரோப் கார் சேவை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோப் கார்
உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வருவதற்கு ரம்பாடா பகுதியிலிருந்து கருட்சட்டி பகுதிக்கு 5 கி.மீ. தூரம் மலையேறி வரவேண்டும். உயரமான செங்குத்தான பனிமலை என்பதால் இதற்கு 8 மணி நேரமாகும்.
இதைத் தொடர்ந்து சோன்பிரயாக் பகுதியிலிருந்து கேதார்நாத்துக்கு ரோப் கார் சேவையைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேசிய வனவாழ்வு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இதன்மூலம் 8 மணி நேர பயணமானது 25 நிமிடமாகக் குறைந்துவிடும் என கூறப்படுகிறது.