July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

“ரூபாயின் மதிப்பு சரியவில்லை… டாலரின் மதிப்பு தான் உயர்கிறது”-
நிர்மலா சீதாராமன் விளக்கம்

1 min read

“The value of the rupee is not depreciating… the value of the dollar is rising” – Nirmala Sitharaman explains

16.10.2022
இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு தான் உயர்கிறது என்றும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைத்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 82.42 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், உக்ரைன் – ரஷியா போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகிறது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நிர்மலா சீதாராமன்

இதனிடையே, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு சென்றார். அவர் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய மாநாட்டில் பங்கேற்றார். அதன் பின் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை… அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பார்க்கிறேன். வலுவடைந்து வரும் அமெரிக்க டாலருக்கு எதிராக அனைத்து நாடுகளின் பணமும் செயல்பட்டு வருகிறது. அனைத்து நாட்டு பணத்தை ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக உள்ளது. வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் பணத்துடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் சிறப்பாக உள்ளது. இதனால் தான் பணவீக்கம் நிர்வகிக்கும் அளவில் தான் உள்ளது என நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.