டியூசனுக்கு வந்த 13 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக திருமணம் செய்த ஆசிரியை
1 min read
A teacher who forcibly married a 13-year-old boy who came to Tucson
17.10.2022
பஞ்சாபின் ஜலந்தரில் பஸ்தி பாவா கேல் பகுதியில், 13 வயது சிறுவனை அவனது ஆசிரியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துள்ளார்.
சிறுவன்
பெண்களுக்கு எதிரான பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாகவும் வருகின்றன. ஆனால் சமீபத்தில் சிறுவர்களுக்கு எதிராக பெண்கள் அநீதி இழைக்கும் சம்பவங்கள் நடைபெற தொடங்கி விட்டன. ப
ஞ்சாபின் ஜலந்தரில் பஸ்தி பாவா கேல் பகுதியில், 13 வயது சிறுவனை அவனது ஆசிரியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட பெண் பெயர் மங்லிக். அவருக்கு திருமண தோஷம் இருந்து உள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் தன் தோஷம் விலகும் என்று நினைத்து உள்ளார்.
இலவச டியூஷன்
பாதிக்கப்பட்ட மாணவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்.அவரது பெற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்தும் வசதி இல்லை. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுப்பதாக கூறி பெற்றோரிடம் அனுமதி வாங்கி,சிறுவனை பெற்றோரிடம் இருந்து அழைத்து வந்து உள்ளார்.
சிறுவனை வீட்டில் வைத்து ஆசிரியர் திருமணம் செய்து கொண்டார். மேலும் மஞ்சள் – மருதாணி வைஅத்தல் முதல் தேனிலவு வரை நடத்தி உள்ளார்.
பிறகு தோஷம் போக்க திருமணமாகி 6 நாட்களுக்குப் பிறகு, அவரே விதவை உடை அணிந்து உள்ளார். இதற்காக அவரே தனது கைகளின் வளையல்களை உடைத்துள்ளார். தாலியையும் அகற்றி உள்ளார்.
கணவர் இறந்துவிட்டார் என உறவினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு, இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பெண் ஆசிரியை மாணவனை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்.
புகார்
சிறுவன் வீட்டிற்குச் சென்று முழு கதையையும் குடும்ப உறுப்பினர்களிடம் கூறியபோது, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர், உடனடியாக அவர் மீது புகார் அளித்தார். புகாரில் மாணவன் தன்னை பிணைக்கைதியாக 6 நாட்கள் பிடித்து வைத்து வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார் என கூறி உள்ளார்.