காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி
1 min read
Mallikarjuna Kharge won the Congress president election by a landslide
19/10/1022
அகிலயஇந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் தலைவர்
ராஜீவ்காந்தி இறந்த பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக பி.வி.நரசிம்மராவ், சீதாராம் கேசரி ஆகியோர் இருந்தனர். அதன்பிறகு 1998ம் ஆண்டு சோனியாகாந்தி கட்சியின் தலைவரானார். அதன்பின் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி அன்று இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பினை ராஜீவ்காந்தி ஏற்றார்.
அவரது தலைமையில் சந்தித்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சி தோல்வியை சந்தித்ததால் அந்த தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரசின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக முறைப்படி அறிவித்துள்ளார். இதனால் சோனியா காந்தி கட்சியின் தற்காலிக தலைவராக பொறுப்பு ஏற்றார். 2019ம் ஆண்டு முதல் இன்றுவரை அவர்தான் பொறுப்பு தலைவராக இருக்கிறார்.
தேர்தல்
காங்கிரஸ் கட்சி கடந்த 2014-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மற்றும் மாநிலத் தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்வியை சந்தித்து வருவதால் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில் கட்சிக்குப் புதிய தலைவரை கட்சி தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டனர். . கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில், சோனியா காந்தி குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிடவில்லை. அதேசமயம், யாரையும் ஒருசார்பாக ஆதரிக்கவும்போவதில்லை என காந்தி குடும்பத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது.
இருமுனை போட்டி
இதனால் தேர்தல் வேட்பாளர்களான சசி தரூர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையே இருமுனைப் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உட்பட பலரும் வாக்களித்தனர். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுவரும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள பாரத் ஜோடோ யாத்ரா முகாமில் வாக்களித்தார்.
அதைத் தொடர்ந்து டெல்லியில் கட்சியின் தலைமையகத்தில் மகள் பிரியங்கா காந்தியுடன் வாக்களித்த சோனியா காந்தி, “இதற்காகத்தான் நெடுங்காலமாக நான் காத்திருந்தேன்” என்று கூறினார். மேலும், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமும் கட்சியில் முதன்முறையாக வாக்களித்தார்.
நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.
ஓட்டு பதிவு முடிவடைந்தது டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்துக்கு வாக்கு பெட்டிகள் நேற்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஓட்டுப்பெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டது. இந்தநிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டனர். இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றதை அடுத்து காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவது உறுதியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக 2000-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஜிதேந்திர பிரசாத்தை தோற்கடித்து சோனியா காந்தி தலைவராக வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.