பள்ளி வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து பிரதமர் ஆய்வு
1 min read
Prime Minister sitting with students in a school classroom study
19.10.2022
குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி காந்திநகரில் ஸ்மார்ட் பள்ளி திட்டத்தின் கீழ் பள்ளி வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து ஆய்வு செய்தார்
குஜராத் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து இம்மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்து வருகிறார்.
இன்று 2 நாட்கள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றுள்ள. காந்திநகர், ஜுகநாத், ராஜ்கோட், கேவடியா மற்றும் வியாரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு ரூ.15,670 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து காந்திநகரில் உள்ள அதலஜ் பகுதியில், குஜராத் அரசின் ‘சிறந்த பள்ளிகளுக்கான இயக்கம்’ என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.