July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

பக்தர்களின் வசதிக்காக திருநீர்மலையில் ரோப்கார் வசதி- அமைச்சர் சேகர்பாபு தகவல்

1 min read

Ropecar facility at Tiruneermalai for the convenience of devotees- Minister Shekharbabu informs

19.10.2022
பக்தர்களின் வசதிக்காக திருநீர்மலையில் ரோப்கார் வசதி செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

திருநீர்மலை

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பல்லாவரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ இ.கருணாநிதி திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவிலுக்கு ரோப்கார் வசதி செய்ய அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

திருநீர்மலையில் 108 படிக்கட்டுகள் உள்ளன. இங்கு சாமி தரிசனம் செய்வதற்கு வயது முதிர்ந்தவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அந்த கோவிலில் ரோப்கார் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சாத்திய கூறுகளும் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ரூ.8 கோடியே 17 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு உள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் இதுபோன்று 5 கோவில்களில் ரோப்கார் வசதி செய்யப்படும் என்று அறிவுறுத்தினார். ஆனால் தற்போது 7 கோவில்களில் ரோப்கார் வசதி செய்யப்பட உள்ளது. பழனியில் புதிதாக ரோப்கார் வசதி ஏற்படுத்து வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.