தமிழகத்தில் வரும் 28-ந் தேதி முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்
1 min read
A fine of Rs 1,000 for not wearing a turban from the 28th in Tamil Nadu
20.10.2022
அபராத தொகையை பத்து மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி 28-ந் தேதி முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
அபராதம்
மோட்டார் வாகன சட்டம் 2019-ல் சில திருத்தங்கள் மேற்கொண்டு அபராத தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில், இதற்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களிடம் நூறு ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை 10 மடங்காக உயர்த்தி 1000 ரூபாய் என்று அரசாணை வெளியிட்டு உள்ளது.
அதன்படி தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் அல்லது பின்னால் இருப்பவரோ தலைக்கவசம் அணியாவிட்டால் இந்த அபராதத்தொகை வசூலிக்கப்பட உள்ளது.