விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
1 min read
M. K. Stalin was the first minister who helped the accident victim
19.10.2022
ஆட்டோ ஒன்றில், சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
மு.க.ஸ்டாலின்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது சென்னை, அண்ணா சாலை, டி.எம்.எஸ் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்தார் .இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்ப்பட்டது
இதனை .கண்டு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று காயமடைந்தவரை உடனடியாக ஆட்டோ ஒன்றில், சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.