100 ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடியின் பக்க விளைவுகள் 100 நாட்களில் நீங்காது- பிரதமர் மோடி பேச்சு
1 min read
Side effects of 100 years crisis will not go away in 100 days- PM Modi speech
22.10.2022
100 ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடியின் பக்க விளைவுகள் 100 நாட்களில் நீங்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
10லட்சம் பேருக்கு வேலை
பிரதமர் மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஸ்கார் மேளா திட்டத்தை நேற்று காணொலிக்காட்சி வழியாக தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஸ்கார் மேளா திட்டத்தை இன்று காணொலிக்காட்சி வழியாக தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியின்போது புதிதாக வேலைக்கு சேர்க்கப்படுகிற 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
சென்னை அயனாவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் 250 பேருக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதனையடுத்து காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
முன்னேற்றம்
இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு பல முனைகளிலும் செயல்பட்டு வருகிறது. இந்தியா இன்று உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். உலகின் பல பெரிய பொருளாதாரங்கள் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் போராடி வருகின்றன என்பது உண்மைதான்.
100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியின் பக்க விளைவுகள் 100 நாட்களில் நீங்காது. இருந்தபோதிலும் இந்தியா முழு பலத்துடன் உலகளாவிய நெருக்கடியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. உங்களின் ஒத்துழைப்பால் இதுவரை எங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. கடந்த 8 ஆண்டுகளில் நமது பொருளாதாரத்தில் தடைகளை ஏற்படுத்திய பிரச்சனைகளை குறைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.