ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து – மத்திய அரசு உத்தரவு
1 min read
Cancellation of license of Rajiv Gandhi Trust – Central Govt
23.10.2022
ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி அறக்கட்டளை
ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.
இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தி, உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.