உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
1 min read
Indian Embassy instructs Indians in Ukraine to leave through neighboring countries
23.10.2022
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உக்ரைன் எல்லையை கடக்க ஐந்து வழித்தடங்களை இந்திய தூதரகம் பகிர்ந்துள்ளது. அதன்வழியாக வரலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.
உக்ரைன்
உக்ரைனில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள் என இந்திய தூதரகம் கடந்த வாரம் அறிவுறுத்தியது.
இந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உக்ரைன் எல்லையை கடக்க ஐந்து வழித்தடங்களை இந்திய தூதரகம் பகிர்ந்துள்ளது. இந்திய குடிமக்கள் உக்ரைன் எல்லையை கடக்க, பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாஸ்போர்ட், உக்ரேனிய குடியுரிமை அனுமதி, மாணவர் அட்டை அல்லது மாணவர் சான்றிதழ் மற்றும் விமான டிக்கெட் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்-ஹங்கேரி எல்லை, உக்ரைன்-ஸ்லோவாக்கியா எல்லை, உக்ரைன்-மால்டோவா எல்லை, உக்ரைன்-போலந்து எல்லை மற்றும் உக்ரைன்-ருமேனியா எல்லை ஆகிய வழிகளில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்களை தூதரகம் பகிர்ந்துள்ளது.
மேற்கூறிய நாடுகளின் தூதரகங்களின் தொடர்பு எண்களையும் பகிர்ந்துள்ளது.