துணைவேந்தர் பதவிகள் விற்பனை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த விஜயகாந்த் கோரிக்கை,
1 min read
Sale of Vice-Chancellor Posts: Vijayakanth Demands Investigation Led by Retired Judge
23.10.2022
துணைவேந்தர் பதவிகள் விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
துணைவேந்தர்கள்
சென்னை, தமிழகத்தின் முன்னாள் கவர்னரும், தற்போதைய பஞ்சாப் மாநில கவர்னருமான பன்வாரிலால் புரோகித், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, தமிழக கவர்னராக இருந்தபோது தமிழகத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அங்கு பல்கலைகழக துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், துணைவேந்தர் பதவிகள் விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.