36 செயற்கைகோள்களுடன், ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது
1 min read
With 36 satellites, the GSLV-3 rocket successfully launched into space
23.10.2022
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களுடன், ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.
செயற்கைகோள்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலை 12.07 மணிக்கு செயற்கை கோள்களுடன் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் சுமார் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். வணிக ரீதியில் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செனது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.
இந்த செயற்கைகோள்கள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. ஒன்வெப் நிறுவனமானது உலக நாடுகளுக்கு அதிவேக இணையதள சேவையை வழங்குவதற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், இந்த 36 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.