உலகிலேயே உயரமான ஐம்பொன் நடராஜர் சிலை வேலூர் பொற்கோவிலில் திறப்பு
1 min read
World’s tallest Aimpon Nataraja statue unveiled at Vellore Golden Temple
23.10.2022
உலகத்திலேயே உயரமான ஐம்பொன் நடராஜர் சிலை வேலூர் பொற்கோவில் வளாகத்தில் திறக்கப்பட்டது.
உயரமான நடராஜர் சிலை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திம்மகுடி சிற்ப கூடத்தில் 23 அடி உயரமும் 15 டன் எடையும் கொண்ட உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை 10 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டது. இந்த சிலையை வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு கொண்டு செல்லும் பணிகளை 10-க்கும் மேற்பட்ட நிபுணர் குழுவினர் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் பெரும் முயற்சிக்கு பின்னர் வேலூர் பொற்கோவிலுக்கு நடராஜர் சிலை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உலகிலேயே உயரமான ஐம்பொன் நடராஜர் சிலை பொற்கோவில் வளாகத்தில் திறக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.