நாளை சூரிய கிரணகம் நிகழ்நாளை சூரிய கிரணகம் நிகழ்கிறது.
1 min read
Tomorrow’s solar eclipse is happening today.
24/10/2022′
நாளை ஐப்பசி மாதம் 8-ந் தேதி 25-10-2022 செவ்வாய்க்கிழமை சூரிய கிரகணம் நிகழ்கிறது. பிரதமை திதி, சுவாதி நட்சத்திரம் 1ம் பாதம் துலாம் ராசியில் மகரம் லக்கினத்தில் சூரிய கிரகணம் நடக்கிறது. இந்த சூரிய கிரகணம் ஆரம்பம் மாலை 5.14 மணிக்கு. கிரகணத்தின் மத்திய காலம் 5.42 மணி. சூரிய கிரகணம் முடியும் நேரம் 6.12 மணி.
நாளை காலை 10 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும்.
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள், சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை, சதயம் நடத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தோஷம். அவர்கள் கிரகண சாந்தி செய்ய வேண்டும்.
கர்ப்பிணிகள் மாலை 5 மணி முதல் 6.20 மணி வரை வெளியே வரக்கூடாது.
பொதுவாக கிரகண நேரத்தில் கோவில்களில் நடை சாற்றப்படும். கிரகணம் என்றாலே குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். அப்படி வெளியில் செல்ல வேண்டி இருப்பவர்கள் பகல் 1 மணிக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்து விட்டு, இரவு 7 மணிக்கு மேல் வெளியில் செல்லலாம். கிரகண நேரத்தில் எதுவும் சாப்பிடக் கூடாது. தொடர்ந்து நீண்ட நேரம் ஏதும் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள், பழ ஆகாரங்களை எடுத்துக் கொள்ளலாம். முடிந்த வரை பழச்சாறாக எடுத்துக் கொள்வது நல்லது.
சூரியனை பார்க்கக்கூடாது. கிரகணம் விட்ட பிறகு மாலை 6.20 மணிக்கு குளித்து விட்டு அவரவர் சம்பிராதாயபடி பூஜை செய்யலாம். கோவிலையும் அதன்பிறகு சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும்.
தர்ப்பணம் செய்பவர்கள் மாலை 6.20 மணிக்கு செய்யலாம்.
கிரகண காலத்தில் வீட்டில் சமைத்த உணவு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். மேலும் அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களில் தர்ப்பை புல்லை போட்டு வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத நிலையில் சமைத்த உணவு இருந்தால் அதிலும் தர்ப்பை புல்லை போட்டு வைக்கவும்.நாளை சூரிய கிரணகம் நிகழ்கிறது.