June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 1,326 பேருக்கு கொரோனா

1 min read

1,326 new cases of corona in India

31/10/2022
இந்தியாவில் ஒரு நாளில் புதிதாக 1,326 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 1,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 53 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று காலை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,723 ஆக உள்ளது. அதேபோல், கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 06 ஆயிரத்து 656 ஆக உயர்ந்துள்ளது.

8 பேர் சாவு

கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 912 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் 8 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,29,024 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 219.63 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.