5 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தப்படவில்லை- அடுத்த ஆண்டு காலாவதியாகும் என தகவல்
1 min read
5 crore doses of covaccine vaccine not used – information due to expire next year
6.11.2022
5 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தப்படவில்லை. இவைகள அடுத்த ஆண்டு காலாவதியாகும் என கூறப்படுகிறது.
கோவாக்சின்
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து விட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதிலும் மக்களிடம் ஆர்வம் இல்லை. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தில் 200 மில்லியனுக்கும்(20 கோடி) அதிகமான அளவு கோவாக்சின் தடுப்பூசி கைவசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கான தேவை இல்லாததால், கோவாக்சின் உற்பத்தி பல மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது சுமார் 50 மில்லியன்(5 கோடி) டோஸ்கள் கோவாக்சின் தடுப்பூசி 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்த சுமார் 10 கோடி டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி காலாவதியாகி விட்டதாக அந்நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.