July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் பிரமாண்ட பேரணி

1 min read

Journalists protest against the Governor in Kerala

8.11.2022
செய்தியாளா்கள் சந்திப்பில் இரு தொலைக்காட்சி நிறுவனங்களைச் சோ்ந்த நிருபா்கள் வெளியேற வேண்டும் என்று கவர்னர் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கவர்னரை கண்டித்து பத்திகையாளர்கள் பேரணி நடந்தது.

கேரள கவர்னர்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கொச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஒரு சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கு தான் பேட்டியளிக்க மாட்டேன் என்றார்.
கேரள கவர்னர் ஆரிப் முகமது கானின் செய்தியாளா்கள் சந்திப்பில் இரு தொலைக்காட்சி நிறுவனங்களைச் சோ்ந்த நிருபா்கள் வெளியேற வேண்டும் என்று கவர்னர் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த இரு ஊடகங்களும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் கூறினார்.அவர்களை உடனடியாக அவர்கள் ஊடகங்கள் போல் வேஷம் போடுகிறார்கள், ஆனால் அடிப்படையில் அவர்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள். ஊடகங்கள் போல் வேஷம் போடுபவர்களிடம் பேச முடியாது என்று கூறினார்.அவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார்.

கேரள கவர்னரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கவர்னரின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கவர்னரின் இந்த செயலுக்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கவர்னரை எதிர்த்து இன்று ராஜ்பவன் நோக்கி பேரணி நடத்தப்போவதாக கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி, திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் இருந்து கவர்னர் மாளிகை வரை ஒரு கிலோமீட்டர் பேரணியை பத்திரிகையாளர்கள் மேற்கொண்டனர்.

மேலும், ஊடகங்களுக்கு தடை விதித்த கேரள கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்(காங்கிரஸ்) வி.டி.சதீசன் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜ்பவனுக்கு கேரளப் பத்திரிக்கையாளர்கள் சங்கம் நடத்திய பேரணியைத் துவக்கி வைத்து வி.டி.சதீசன் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், “சில ஊடகங்களை மட்டும் வெளியேற்றிய கவர்னரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது. ஊடகத் தடை என்பது ஜனநாயக இந்தியாவுக்கே அவமானம். மக்களுக்கு தகவல் தெரிவிப்பதில் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உள்ளது. ஜனநாயகத்தில் ஊடக சுதந்திரம் முக்கியமானது. ஊடக சுதந்திரம் மறுக்கப்படும் இடத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.
கேரள கவர்னர் அரசியல் சட்டத்திற்கு முரணான செயல்களைச் செய்கிது, பிரபலமாக இருக்கவும் செய்திகளை உருவாக்கவும் முயற்சிக்கிறார். ஊடகங்களுக்கு தடை விதித்த கேரள கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஊடகவியலாளர்கள் செயலகத்துத்துக்குள் செல்ல அனுமதி இல்லை. இழந்த உரிமைகளை மீட்டெடுக்க பத்திரிகையாளர்கள் சங்கம் போராட்டம் நடத்த வேண்டும்.அடையாள அட்டை வைத்திருக்கும் ஊடகவியலாளர்கள் உள்ளே நுழைந்தால் செயலகம் இடிந்துவிடுமா? ஊடகவியலாளர்களுக்கு செயலகத்துக்குள் நுழையும் உரிமை மறுக்கப்படக்கூடாது” என எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.