July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

மாணவனுக்கு மதுகொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த டியூசன் ஆசிரியை

1 min read

Tucson teacher who gave alcohol to student and sexually assaulted him

11-ம் வகுப்பு மாணவனுக்கு மதுகொடுத்து 34 வயது டியூசன் டீச்சர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மாணவன்

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் 11-ம் வகுப்பு படித்து வருகிறான். இதனிடையே, மாணவனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த மாணவன் சரிவர படிக்காமல் மனரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருந்துள்ளான். இதனால், கவலையடைந்த மாணவனின் பெற்றோர்
இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த மாணவனை அழைத்து ஆசிரியைகள் விசாரித்தனர். பின்னர், மாணவனை அழைத்து மனநல ஆலோசனை வழங்கினர்.

டியூசன் ஆசிரியை

இந்நிலையில், மனநல ஆலோசனையின்போது ஆலோசகரிடம் மாணவன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளான். டியூசன் ஆசிரியை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவன் தெரிவித்துள்ளான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியைகள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலை அறிந்த மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 34 வயதான டியூசன் டீச்சரை கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது:-
திரிச்சூரை சேர்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் கொரோனா காலத்தில் அதேபகுதியை சேர்ந்த 34 வயதான பெண்ணின் வீட்டிற்கு டியூசன் படிக்க சென்றுள்ளான். ஜிம் பயிற்சியாளராக இருந்த அந்த பெண் அந்த வேலையை விட்டு விலகி கொரோனா காலத்தில் வீட்டில் டியூசன் வகுப்புகள் நடத்தி வந்துள்ளார். அந்த பெண் தனது கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். கொரோனா காலத்தில் தனது வீட்டிற்கு டியூசன் படிக்க வந்த அந்த 16 வயதான பள்ளி மாணவனுக்கு டீச்சர் மது கொடுத்துள்ளார். மது குடித்ததில் மயக்க நிலைக்கு சென்ற அந்த மாணவனை டியூசன் டீச்சர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். டியூசனுக்கு சென்ற அந்த மாணவனுக்கு மதுகொடுத்து டீச்சர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் கொரோனா காலத்தில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவன் மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். டியூசன் டீச்சர் கடந்த 28-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். டியூசன் டீச்சர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. கொரோனா காலத்தில் டியூசன் படிக்க வந்த பள்ளி மாணவனுக்கு மதுகொடுத்து டியூசன் டீச்சர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.