திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால்ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை
1 min read
A college student committed suicide by jumping in front of a train as her parents did not agree to her marriage
9.11.2022-
சிதம்பரத்தில் ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். காதலரை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார்.
கல்லூரி மாணவி
சென்னையில் இருந்து திருச்செந்தூர் திங்கள்கிழமை இரவு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது இந்த ரெயில் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை அருகே சென்ற போது ரெயில் முன்பு பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றிய அறிந்த சிதம்பரம் இருப்பு பாதை ரெயில்வே போலீசார் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் அப்போது உடல் சிதைந்து நிலையில் இளம்பெண் பிணம் கிடந்தது இது குறித்து போலீசார் நடத்தி விசாரணையில் அவர் வல்லம்படுகை மெயின் ரோடு பகுதி சேர்ந்த கணேசமூர்த்தி மகள் கிருத்திகா(வயது 19) என்பது இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3 ஆண்டு படித்து வந்தது தெரிய வந்தது.
திங்கட்கிழமை இரவு வழக்கம்போல் சிதம்பரத்தில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு பயிற்சி வகுப்பிற்காக சென்றார் அங்கு வகுப்பு முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வல்லம்படுகை அருகே ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தெரியவந்தது. மேலும் மாணவியின் தற்கொலை முடிவு காண காரணம் குறித்து போலீசார் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்
இதில் மாணவி கிருத்திகாவும் உறவினரான கார்த்தி என்கின்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர் இவர்களது காதல் விவகாரம் விவகாரம் இரு விட்டாருக்கும் தெரிய வந்த நிலையில் திருமணத்துக்கு பச்சைக்கொடி காண்பித்தனர்.
திருமணத்திற்கு மறுப்பு
இந்த நிலையில் கார்த்தியின் தாய் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி அறிந்த கிருத்திகாவின் தந்தை ஏற்கனவே கார்த்தியின் தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். நீயும் அந்த சென்று கஷ்டப்பட போகிறாயா? என்று கிருத்திகாவிடம் கேட்டு காதலனை திருமணம் செய்ய திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனது காதலனின் கரம் பற்றி வாழும் ஆசை கானாவில் இருந்த கிருத்திகாவுக்கு தந்தையின் இத்தகைய திடீர் முடிவு பேரதிர்ச்சியாக அமைந்தது இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கிருத்திகா இறுதியாக மரணத்தை தழுவுவது என்று முடிவு செய்துள்ளார் அதன்படி திங்கள்கிழமை இரவு அந்த வழியாக சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து மாணவி கிருத்திகா தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் கிருத்திகா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது காதலர் கார்த்தியிடம் போன் செய்து பேசியுள்ளார். அதில் நமது திருமணத்திற்கு எனது பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த கார்த்தியும், தனது காதலிக்கு தைரியத்தை கொடுத்து நாம் விரைவில் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம் என்று கூறி அவரை ஆசுவாசப்படுத்தினார்.
ஆனால் அவர் போனை வைத்து சில மணி துளிகளில்,கிருத்திகா மரணம் தழுவி விட்டார். மாணவி இறந்தது பற்றி அறிந்த அவரது பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு அவரது மகள் உடல் சிதைந்து இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து மாணவியின் உடலை போலீசர்க்கை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் இருப்புபாதை ரெயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.