இந்திய, தமிழக அளவில் கொரோனா நிலவரம்
1 min read
Corona situation in India and Tamil Nadu
9.11.2022
இந்திய, தமிழக அளவில் கொரோனா நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்திய அளவில் கொரோனா
உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 811 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,62,952பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக தொற்றால் 2 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,30,511 ஆக உள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4,41,18,882 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 13,559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 2,19,75,22,436 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 70,678 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் காலை வெளியிட்டது.
தமிழகம்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 53 ஆண்கள், 43 பெண்கள் உள்பட மொத்தம் 96 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தேனி, தென்காசி, திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. மேலும், 12 வயதுக்குட்பட்ட 27 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 20 முதியவர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 218 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 862 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.