July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

பேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம்

1 min read

More than 11,000 employees were laid off at Facebook

9.11.2022
பேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எலான் மஸ்க்

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் உலகின் மிகவும் பிரபல சமூகவலைதள நிறுவனமான டுவிட்டரை சமீபத்தில் வாங்கினார். இதனையடுத்து, டுவிட்டரில் அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 7 ஆயிரத்து 500 ஊழியர்களில் 50 சதவிகித ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி கடந்த 5 ம் தேதி டுவிட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், டுவிட்டர் ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

பேஸ்புக்

இந்நிலையில், டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி பேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், ‘மெட்டா நிறுவன வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான சில மாற்றங்கள் தொடர்பாக தகவலை இன்று பகிர்கிறேன். எங்கள் குழுவின் வலிமையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11,000-க்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளேன். குறிப்பிட்ட செலவினங்களைக் குறைப்பது மற்றும் முதல் காலாண்டு வரை ஆட்சேர்ப்பை நிறுத்தி வைப்பதன் மூலம் திறமையான நிறுவனமாக மாறுவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.