கர்நாடகாவில் இருந்து திருடப்பட்ட சாமி சிலையை மாறு வேடத்தில் சென்று மீட்ட அதிகாரிகள்
1 min read
Officials disguised as stolen Sami idol from Karnataka and recovered it
9.11.2022
கர்நாடக மாநிலத்தில் இருந்து திருடப்பட்ட சாமி சிலையை, அதிகாரிகள் மாறு வேடத்தில் சென்று மீட்டுள்ளனர். கோபிசெட்டிபாளையம், கர்நாடக மாநிலத்தில் இருந்து திருடப்பட்ட சாமி சிலையை, அதிகாரிகள் மாறு வேடத்தில் சென்று மீட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு கோவிலில் இருந்து பூசாரி ஒருவர் பாலாஜி சிலையை திருடி, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வக்கீல் பழனிச்சாமி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இதையறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பழனிச்சாமியின் உதவியாளர் நடராஜன் என்பவரிடம் மாறுவேடத்தில் பழகியுள்ளனர். அப்போது, அவர் எங்களிடம் பழங்கால சாமி சிலை ஒன்று இருப்பதாகவும், அதன் மதிப்பு 33 கோடி எனவும் கூறியதை அடுத்து மாறுவேடத்தில் இருந்த அதிகாரிகள் 15 கோடிக்கு வாங்க சம்மதித்துள்ளனர். இதை பழனிசாமியிடம் நடராஜன் தெரிவித்து அவரை சிலையுடன் அழைத்து வந்துள்ளார். அப்போது அவர்களை மடக்கி பிடித்த அதிகாரிகள் உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் சிலையை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது என்றும், இதன் பிண்ணனியில் யார் உள்ளார்கள் எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்