சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்பு-பிரதமர் மோடி வாழ்த்து
1 min read
TY Chandrachud sworn in as Chief Justice of Supreme Court- PM Modi congratulates
9.11.2022
சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் நேற்று ஓய்வுபெற்றார். அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை கடந்த மாதம் 11-ந்தேதி ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தார். அதையடுத்து, டி.ஒய்.சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மாதம் 17-ந்தேதி உத்தரவிட்டார்.
அதன்படி சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்றார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
2 ஆண்டுகளுக்கு…
1959-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி பிறந்தவரான சந்திரசூட், கடந்த 2016-ம் ஆண்டு மே 13-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவியேற்றார். அவர் தலைமை நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு, அதாவது 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி வரை பொறுப்பு வகிப்பார்.
வாழ்த்து
சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற டி.ஒய்.சந்திரசூட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற டாக்டர் டிஒய் சந்திரசூட் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.