மோடிக்கு பொன்னியின் செலவன் நாவல்
1 min read
Ponni’s cost to Modi is novel
11.11.2022
பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் 5 பாகங்களை கொண்ட புத்தகம் வழங்கினார்
பொன்னியின் செல்வன்
திண்டுக்கல், காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர்மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி திண்டுக்கல் வந்தார்.
திண்டுக்கல்லில் நேரில் வரவேற்ற முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் 5 பாகங்களை கொண்ட ஆங்கில பதிப்பு புத்தகம் வழங்கினார் பின்னர் திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார் .பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்ளும் பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.