விபத்து இழப்பீடு வழக்குகளில் முறைகேடு-திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி பணிநீக்கம்
1 min read
Misconduct in accident compensation cases-Thiruvannamalai District Sessions Judge sacked
12.11.2022
விபத்து இழப்பீடு வழக்குகளில் முறைகேடு தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அமர்வு நீதிபதி
திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதியாக பணியாற்றிவந்தவர் எம்.கே.ஜமுனா இவர் நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக எழுந்த புகார்களின் பேரில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் எம்.கே.ஜமுனாவை பணிநீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளியன்று அதிரடியாக உத்தரவிட்டது.
அந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்தார். அந்த உத்தரவு நீதிபதி எம்.கே.ஜமுனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்ல் நீதிபதியாக பணிபுரிந்தபோது விபத்து இழப்பீடு வழக்குகளில் தவறுகள் நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் திருவண்ணாமலையில் பொறுப்பேற்ற பிறகு விபத்து வழக்கு விசாரணையில் தவறுகள் நடந்திருப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
பங்கேற்கவில்லை