வேலூர் மருத்துவ கல்லூரியில் நடந்த ‘ராக்கிங்’ கொடுமை குறித்து தாமாக முன்வந்து ஐகோர்ட்டு விசாரணை
1 min read
Self-initiated court inquiry into ‘rocking’ incident in Vellore Medical College
12.11.2022
வேலூர் மருத்துவ கல்லூரியில் நடந்த ‘ராக்கிங்’ கொடுமை குறித்து சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொள்ள உள்ளது.
வேலூர் மருத்துமனை
வேலூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர். விடுதியில் தங்கியிருக்கும் ஜூனியர் மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ‘ராக்கிங்’ என்ற பெயரில் கொடுமை செய்துள்ளனர். அதாவது, முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலரை அரை நிர்வாணமாக்கி ‘ராக்கிங்’ செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சி அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியானது.
இது சம்பந்தமாக கல்லூரி நிர்வாகத்துக்கும் புகார் கடிதமும் வந்துள்ளது. இதை விசாரித்த கல்லூரி நிர்வாகம் ‘ராக்கிங்’ செய்ததாக 7 சீனியர் மாணவர்களை கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்துள்ளனர். மேலும், தங்களுக்கு வந்த புகார் கடிதத்தையும், சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவையும் போலீசில் கொடுத்து, இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர் புகார் கொடுத்துள்ளார். இந்தநிலையில், மருத்துவ கல்லூரி ஜூனியர் மாணவர்களுக்கு ‘ராக்கிங்’ என்ற பெயரில் நடந்துள்ள கொடுமை குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளனர். இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.