சுரண்டை அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டம்
1 min read
Surandai Govt College Honorary Lecturers class boycott strike
12.11.2022
தென்காசி மாவட்டம்,சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் இன்று கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் வேண்டி வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு கவுரவ விரிவுரையாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் வைரவன், கார்த்திக் குமாரவேல், சந்தனாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்திரைகனி வரவேற்றார்.
போராட்டத்தில் அரசாணை 56-ஐ அமல்படுத்த கோரியும், கவுரவ விரிவுரையாளர்களின் நலனை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 246, 247, 248 ஆகியவற்றை ரத்து செய்யக்கோரியும் வகுப்புக்கு பாடம் எடுக்க செல்லாமல் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் மாரிச்செல்வி, முத்துலட்சுமி, குழல் வாய்மொழி, இளங்கோவன், ஹரிஹரசுதன், அண்ணாமலை, லட்சுமணன், ராஜலட்சுமி அமிர்தராஜ், செல்லையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.